வந்தது புத்தாண்டு
நம் பயணத்தில் இனிமேல்
வெற்றியே கொண்டாடு
சென்றதை மறந்துவிடு
நாம் செல்லும் பாதையின்
தடைகளை பெயர்த்துவிடு
சிந்தையில் எண்ணியதை
நாம் அடைவதற்கு என்றே
பிறக்குது புத்தாண்டு
பந்தயக் குதிரை என
நாம் புறப்பட்டு செயல்பட
பலமுடன் நீ எழு
முந்தைய காலங்களில்
முடங்கி கிடந்ததை நீயும்
முழுதாய் மறந்து விடு
விந்தைகள் புரிவதற்கும்
நாம் வானத்தை தொடுவதற்கும்
விடியுது புத்தாண்டு
செந்தமிழ் சொல் எடுத்து
தென்கடலின் சங்கெடுத்து முழங்க
பிறக்குது புத்தாண்டு
வந்து நம் தோழருடன்
புத்தாண்டின் வருகைக்கு நீயும்
வாழ்த்துப்பா பாடிவிடு
-இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!