புத்தாண்டு பிறக்குது
புதுப்பாதை திறக்குது
எத்தனை இன்பங்கள்
எளிதாக கிடைக்குது
புத்தனும் காந்தியும் தந்த அன்பு
ஊற்றாய் பெருகுது
நித்தமும் நன்மை மட்டும்
நிலைத்திட உலகம் மகிழுது
திக்கெட்டும் அமைதியை பரப்பி
இயற்கை நம்மை காக்குது
இனிய (2025) ஆங்கிலப்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!