காலங்கள் கடந்து வருடங்கள் நகர்ந்தாலும்
பிறக்கும் வருடம் புது வருடமே!
கற்பித்த கலைகள் வாழ்க்கைப் பாடங்களே!
அன்பாய்த் தொடங்கிய 2020-ல்
அனைவரின் வாழ்த்துடனும் தித்திக்கும் பொங்கலுடனும்
எத்திசையும் மகிழ நாட்கள் நகர்ந்தன
அண்டை நாட்டின் அலட்சிய போக்கால்
அன்னை நாடு அடிமையானது
கொரோனா என்னும் கொடிய அரக்கனால்!
கோர்த்து சேர்த்த உறவுகள்
கொத்துக் கொத்தாய் மடிந்தன
அண்டத்தையே ஆட்டிப் படைத்த அசுரன்
அடுத்த ரூபம் பெற்றான்
ஆண்டின் இறுதியில்
இவை பற்றாதென இடையிடையே
வெள்ளத்தாலும் விமானத்தாலும்
விடியல் பெற்ற பாரதம்
வீழ்ந்து வீழ்ந்து எழுந்தது
எத்தனை உயிர்கள்
எத்தனை பயிர்கள்
எத்தனை மனங்கள்
மண்ணோடு மாண்டன
இருப்பினும்
துன்பத்திலும் இன்பமாய்
தீமையிலும் நன்மையாய்
உலகை ஆண்ட கொரோனாவால்
உறவின் உயர்வை அறிந்தோம்
உயிரின் பெருமை அறிந்தோம்
பாரம்பரிய பழக்கம் அறிந்தோம்
வாழ்வின் சிக்கனம் அறிந்தோம்
வாழ்க்கைப் பாடம் கற்றோம்
இயற்கை அன்னை இடர்பாடுகள் குறைந்து
இன்பமாய் மலர்ந்தாள்
இயற்கை சுவாசம் பெற்றாள்
அத்தனையும் போகட்டும்
அனைத்திலும் நம்மை அன்பாய்க் காத்த ஆண்டவனை ஆராதிப்போம்
அன்னை பூமியில் அடுத்த வருடம் அழகாய் மலரட்டும்
கொரோனா என்னும் கொடிய அரக்கன்
கொத்தோடு விலகட்டும்
பத்தோடு பதினொன்றாய்
இத்தோடு ஒழியட்டும்
அத்தனைத் துன்பமும்
இதுவும் கடந்து போகும்
இன்ப வாழ்வு மலரும்
இறையோடு இணைவோம்
இன்பம் பெறுவோம்
இறந்த வருடம் கழியட்டும்!
பிறந்த வருடம் மலரட்டும்!
அனைவருக்கும்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சி.பிரகதீஸ்வரி