”கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்!” எனும் தாரகச் சொல்லுடன் உலக இலக்கியமும் நவீன இலக்கியமும் பேசும் தமிழின் மிக முக்கியமான இணையதளம் சொல்வனம் ஆகும்.
பண்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் நிறைந்து, எங்கும் எதிலும் இலக்கியவாடை மட்டுமே அடிக்கும் மாபெரும் படைப்புச் சந்தை இது.
தீராத இலக்கிய அகோரப்பசியுடன் அலையும் ஒரு கூட்டம் உண்டென்றால், அது சொல்வனக் கூட்டம் தான்.
ஆழமும் அழகும் மிக்கதான இலக்கிய வனம் தான் இந்தச் சொல்வனம்.
இந்தத் தளத்தில் கீழ்க்கண்ட தலைப்புகள் உள்ளன.
முகப்பு
பகுப்புகள்
எழுத்தாளர்கள்
சிறுகதை
கவிதை
கட்டுரை
இலக்கிய விமர்சனம்
மொழிபெயர்ப்பு
இசை
தத்துவம்
பகுப்புகள் எனும் பகுதியில் உள்ள தலைப்புகள் 271 தலைப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் பல நூறு படைப்புகள் உள்ளன.
உதாரணமாக, உலக இலக்கியம் எனும் தலைப்பின் கீழ்,
ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம் – நம்பி
ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம் – மைத்ரேயன்
பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல் – நம்பி
பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் – நம்பி
விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன்
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் – நம்பி
செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி – இரா.இரமணன்
ஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு – நம்பி
டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு – நம்பி
போன்ற பலநூறு கட்டுரைகள் உள்ளன.
எழுத்தாளர்கள் பகுதியில், பலநூறு உலக எழுத்தாளர்களின் பட்டியல் உள்ளது. அவற்றைச் சொடுக்கினால், அந்த எழுத்தாளர்கள் குறித்த படைப்போ, அந்த எழுத்தாளர் எழுதிய படைப்போ கிடைக்கும்.
பல்வேறு மொழியில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளைத் தமிழில் காண இந்த இணையதளம் ஒன்றே போதும். அவ்வளவு உள்ளன.
இதே போல், கவிதை, சிறுகதை, கட்டுரை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, இசை, தத்துவம் ஆகியவற்றைக் காணமுடியும். புத்திலக்கியப் படைப்பாகவும் அவைகள் உள்ளன.
ஜூன் 2009 முதல் இம்மாதம் வரை வெளிவந்த ஒவ்வொரு இதழிலும், நயமிக்க அற்புதப் படைப்புகளைக் காணலாம்.
இதழ்- 241-ல் மொழிபெயர்ப்புக்கவிதைகளாக 5 கவிதைகள் உள்ளன. அவையாவன,
ஷாங்க்யா கோஷ் கவிதைகள் – தமிழில்: வேணுகோபால் தயாநிதி
சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள் – தமிழில்: கு. அழகர்சாமி
சுகந்தா பட்டாச்சார்யா கவிதைகள் – தமிழில்: ராமலக்ஷ்மி
ஜோய் கோஸ்வாமி கவிதைகள் – தமிழில்: விருட்சன்
படைப்பின் தருணம் – புத்ததேவ போஸ் – தமிழில்: வெங்கட் பிரசாத்
என்பதாகும்.
சொல்வனம் சிறப்பிதழ்களாக,
வங்கமொழி இலக்கியமும்,
அ.முத்துலிங்கம் குறித்து 166 படைப்புகளும்,
அசோகமித்திரன் குறித்து 100 படைப்புகளும்,
அம்பை குறித்து 200 படைப்புகளும்,
அறி-புனை குறித்து 180 படைப்புகளும்,
இசை குறித்து 15 படைப்புகளும்
க.நா.சுப்ரமணியம் குறித்து 75 படைப்புகளும்,
தி.ஜானகிராமன் குறித்து 50 படைப்புகளும்,
பெண்கள் சிறப்பிதழ் 2, பொலான்யோ குறித்து 225 படைப்புகளும்,
லாசரா & சிசு செல்லப்பா குறித்து 86 படைப்புகளும்,
வி. எஸ். நைபால் குறித்து 194 படைப்புகளும்,
வெங்கட் சாமிநாதன் குறித்து 139 படைப்புகளும்,
ஸீபால்ட் குறித்து 204 படைப்புகளும், ஆக இது போல்வெளியிடப்பட்டுள்ளவை மாபெரும் சிறப்பாகும்.
மொத்தத்தில் தமிழ் இலக்கியத் தரத்தை மேன்மைப்படுத்தும் பெருமுயற்சியை இந்தத் தளம் செய்து கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
சமீபத்தில் வெளியான வங்கமொழிச் சிறப்பிதழ் முழுமையான வங்க இலக்கியத்தைத் தமிழ்மொழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறது அவ்விதழில் உள்ள படைப்புகளைக் காணும்போது பெருமையாக இருக்கிறது.
சொல்வனத்தில் நுழைந்து படைப்பைச் சுவைக்க https://solvanam.com எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!