கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே
கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே
வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்
ரெட்டைவாலினைக் காணவுமில்லையே
சிட்டுக்குருவியின் நிலைதனையே நீங்காது
நினைவில் தூண்டுதே
சிந்தனை இருந்தும் சிந்திக்க மறந்தோம்
நிந்தனை செய்தே வாழ்வினைக் கடந்தோம்
இந்நிலைதனை மாற்றும் நிகழ்வும் வரவே
புள்ளினங்கள் வாழ்ந்திடும் நீடூழி நீடூழி
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!