பூக்களெல்லாம் பாடம் நடத்த பள்ளிக்கூடம் வந்தன
புன்னகையே முகத்தில் தங்க சிரிச்சு பேசலாயின
நாக்கில் இனிக்கும் தேன்சுமந்த தும்பைபூ எழுந்தது
நான்தான் இனி அறிவியலை நடத்திடுவேன் என்றது
கூக்கூவென சத்தமிட்டு தாழம்பூவும் நிமிர்ந்தது
கூட்டல் கழித்தல் எல்லாமே நான்தான் இனி என்றது
வெட்கத்துடன் தலைகுனிந்து வாழைப்பூவும் வந்தது
வரலாறு பாடம் நடத்த நானிருக்கேன் என்றது
ஏக்கத்துடன் வேப்பம்பூவும் மெல்ல எட்டிப் பார்த்தது
இங்க விளையாடும் இடத்திலேதான் எனக்கு வேலை என்றது
பச்சைக்காலில் நடனமாடி நல்ல தமிழ் பாட்டினை
பாடிடுதே மல்லிகை மதுரைத்தமிழ் வார்த்தையை
திக்கெட்டும் இந்த ஒலி பரவும்படி நீங்களும்
தீந்தமிழை பாடியே சேர்ந்து ஆட வாருங்களேன்!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
மறுமொழி இடவும்