பூக்காரி – கவிதை

ஆத்தா உன் கோயிலிலே

என்னிடம்

நேரத்தைக் கேட்டுவிட்டு

மீண்டும் குரல் கொடுக்க

ஆரம்பித்தாள்

பூக்காரப் பெண்.

பூவின் வாசம் போல்

அவளது குரலும்

காற்றில் பயணித்தது.

காவல்நிலைய தெருவில்

வாசங்களால்

கைது செய்யபட்ட

கைதியாக

முழமளவு சங்கிலியை

விருப்பப்படுகிறார்கள்.

அளந்த முழத்தை

அறுப்பதற்கான பிளேடு

ஒவ்வொரு முழமாக

விடுதலை செய்யும்

குற்றம் புரிந்த

கஷ்டங்களை

பூக்காரியின்

வாழ்க்கையிலிருந்து.

சிதவி.பாலசுப்ரமணி