எங்கிருந்தோ வந்த பூச்சி ஒன்று
அவன் அறையில் சிக்கிக் கொண்டது
அவனும் அவ்வாறாக மாட்டிக் கொண்ட
பல அறைகள் உண்டு
அங்கும் இங்கும் என
அலை பாய்ந்தது பூச்சி
அவன் நிலை குலைந்து போனான்
பூச்சி தன் விடுதலையைத் தேடியது
கல் போல் இருந்த
அவனது நிலைமையும்
அப்படித்தான் இருந்தது
ஒரு பொருள் பழைய பொருள்
ஆகிறது என்றால் யாரோ ஒருவர்
அதை எழுதிக் கொண்டிருக்கிறார்
அவனது கவனம்
அதற்கான காரணத்தைச் சொல்லியது
ஒன்றிலிருந்து பலவாறாக மாறிய
மற்றதை யார் சொல்வது
இனிமேல் தான் சொல்ல வேண்டும்