பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி?

பூரி கிழங்கு மசாலா ரொம்ப சுவையான சைடிஷ். ஹோட்டல் ஸ்டைலில் கிழங்கு மசாலா செய்யும் முறையைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இதனை தயாரிக்கவும் குறைந்த நேரமே ஆகும்.

உருளைக்கிழங்கினைக் கொண்டு சப்பாத்திக்கும், பூரிக்கும் மசாலா தயார் செய்யும் போது வேறு வேறு முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.

இரண்டுக்கும் வேறுவேறு மசாலாப் பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. இனி சுவையான பூரி கிழங்கு மசாலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ கிராம்

பெரிய வெங்காயம் – 1/4 கிலோ கிராம்

இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு

கடலைப் பருப்பு – ஒரு குழிக்கரண்டி

மஞ்சள் பொடி – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 1/2 டம்ளர்

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 4 கீற்று

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)

செய்முறை

முதலில் உருளைக் கிழங்கினை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

 

உருளைக்கிழங்கினை அவித்த பின்
உருளைக்கிழங்கினை அவித்த பின்

 

பெரிய வெங்காயத்தை நேராக வெட்டிக் கொள்ளவும்.

 

வெட்டிய வெங்காயம்
வெட்டிய வெங்காயம்

 

இஞ்சி தோல் சீவி நசுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதில் கடலைப் பருப்பு சேர்த்து வதக்கவும்.

 

கடலைப் பருப்பு சேர்த்து வதக்கும் போது
கடலைப் பருப்பு சேர்த்து வதக்கும் போது

 

பருப்பு சிவந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயத்திற்குத் தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.

 

பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது
பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது

 

வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும், அதில் நசுக்கிய இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 

கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பெரிய வெங்காயம்
கண்ணாடி பதத்திற்கு வதங்கிய பெரிய வெங்காயம்

 

நசுக்கிய இஞ்சியைச் சேர்த்ததும்
நசுக்கிய இஞ்சியைச் சேர்த்ததும்

 

பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

 

உருளைக்கிழங்கு, மஞ்சள், உப்பு சேர்த்ததும்
உருளைக்கிழங்கு, மஞ்சள், உப்பு சேர்த்ததும்

 

ஒரு கொதி வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

 

அடுப்பினை அணைத்து விடவும்
அடுப்பினை அணைத்து விடவும்

 

சுவையான பூரி கிழங்கு மசாலா தயார்.

 

சுவையான பூரி கிழங்கு மசாலா
சுவையான பூரி கிழங்கு மசாலா

 

இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

குறிப்பு

உருளைக் கிழங்கினை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் நன்கு மசிக்க வரும்.

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்து மசாலா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.