பெட்டைக் கோழி

பெட்டைக் கோழி கூவுது

பெட்டைக் கோழி கூவுது ‍ -வெண்

முட்டையிட மூலை பார்த்து

முன்னும் பின்னும் தாவுது

முன்னும் பின்னும் தாவுது

 

முட்டை இட்ட கோழி குந்தி

முட்டை அடை காக்குது  – கோழி

முட்டை அடை காக்குது

வட்டச் சேவல் அருகில் வந்து

பார்த்துப் பார்த்துத் திரும்புது

 

பஞ்சு போலச் சின்னச் சின்னக்

குஞ்சு தாயைத் தொடருது – சின்ன

குஞ்சு தாயைத் தொடருது

அஞ்சி அஞ்சிப் பெட்டைக் கோழி

அருகி ருந்தே காக்குது

 

பருந்து கீரி பார்த்து பார்த்தே

பாய்ந்து கோழி தாக்குதே – சீறிப்

பாய்ந்து கோழி தாக்குதே

அருந்த குஞ்சு சீய்த்துக் காட்டி

அருகி ருந்தே காக்குது

– வாணிதாசன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.