மண்ணின் மகத்துவம் பெண்
மானிடரின் செல்வம் பெண்
மரியாதைக்கு உரியவள் பெண்
தாயாக, தாரமாக, தோழியாக
தங்கையாக, அக்காவாக, மகளாக
பாட்டியாக இன்னும் பல
உறவாக உயிராக உலவும்
உன்னத பிறப்பினை உயர்த்துவோம்
உலக ஆண்களுக்கு உணர்த்துவோம்
உணர்வான பெண்ணைக் காப்போம
்
தகாத செயல்களை நீக்குவோம்
தவறான பார்வையை மாற்றுவோம்
தன்மான பெண்ணைப்
போற்றுவோம்
சிறந்த பெருமை கொண்ட
பரந்த திறமை கொண்ட
தியாக பிறப்பான கண்ணான
பொன்னான பெண்களை
மதிப்போம்
பெண்களை மதிப்போம்
பெண்களை மதிப்போம்

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!