உன் காந்தக் கண்கள் இனி
கடும் நெருப்பை உமிழட்டும்!
தேன் சிந்தும் குரலில் இனித்
தெளிவு மலரட்டும்!
நாணத்தில் சிவந்த முகம் தன்
கோணத்தை மாற்றட்டும்!
உருகும் உன் உள்ளம் இனி
உடையாமல் இறுகட்டும்!
தங்கச் சிலையே உன்
அங்கம் காத்திடவே
கங்குக் கடலென நீ
பொங்கி எழுந்திடடி!
பெண்ணை மண்ணெனவே
எண்ணும் கீழ்மனிதர்
கண்ணின் முன்னே நீ
விண்ணைத் தொட்டிடடி!
கண்ணே என் காரிகையே
பெண்ணே நம் தெய்வமென
மண்ணோர்கள் மதிக்கட்டும்!
மதியாதோர் திருந்தட்டும்!
வரப்போகும் புதுவிடியல்
வளமாக மாறட்டும்!
உரம்கொண்டு உன்நெஞ்சம்
உறுதியோடு வாழட்டும்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!