பெண்ணே நீ

அம்மா நீ அத்தை நீ

அக்கா நீ தங்கை நீ

சித்தி நீ பெரியம்மா நீ

தோழி நீ காதலி நீ

மனைவி நீ மகள் நீ

பாட்டி நீ பேத்தியும் நீ

ஆசிரியர் நீ வழிகாட்டி நீ

மருத்துவர் நீ வழக்கறிஞர் நீ

தற்காப்பு நீ பாதுகாப்பு நீ

வலிமை நீ தைரியமும் நீ

முதல் நீ முடிவும் நீ

தெய்வங்களில் நீ மிருகங்களில் நீ

முப்பெரும் தேவியரும் நீ

இப்படி பல வடிவங்களில் நீ

எல்லோரும் நினைக்கும் இடங்களில் நீ

உருவாக்குவது நீ அழிப்பது நீ

உலகத்தில் பயன்படுத்தப்படாத

மிகப்பெரிய களஞ்சியம் நீ

உன்னுள் எல்லாமே அடங்கும்

தேயிலை பை போன்றவள் நீ

வெந்நீரில் போடும் வரை

வீரியம் எவ்வளவு என்று

யாருக்கும் தெரியாது

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்