மாதவம் செய்திடல்
மங்கையர் பிறப்பே…
மண்ணில் மாணபு
மணத்திட செய்பவளே…
மிளிரும் மின்னல்
மிதமான ஒப்பனை
மின்னிசை பாடும்
மௌனத்தின் மொழியாள்…
மேலை நாட்டு
மேன்மை நாகரீகம்
மேவியே விட்டு
மண்ணின் கலாசாரமானவளே…
அடுத்த வாரீசை
அன்போடு கொண்டே
அவசர உலகில்
அங்கீகார அவதாரம்…
மாமேதைகளாய் வலம்
வருவோரைப் போற்றுவோம்
நேர்மறையான எண்ணங்களின்
பெண்மையையும் போற்றுவோம்!
கவிஞர் இரஜகை நிலவன்
மும்பை