பெண்ணே!
அன்பின் ஊற்றாய் அறிவின் ஒளியாய்
வீட்டின் விளக்காய் தியாகத்தின் திருவுருவாய்
உறவுகளின் பிறப்பிடமாய் விளங்குபவள் நீ!
தனக்கென வாழா பிறருக்கென வாழும் பெருந்தகையாள்!
குடும்பத்தில் நீ இன்றி ஒரு அணுவும் அசையாது!
நீ இல்லாத வீடு ,இருண்ட காடு அன்றோ!
உலகிற்கு உயிர் கொடுப்பவள் நீயே அன்றோ!
உன் தாய் பாசத்திற்கு நிகர் உலகில் ஏதும் உண்டோ!
எடுத்த காரியத்தை முடிக்கும் மகத்தான மங்கை நீ!
பெண்மையை போற்றுவோம்!
மகளிரை மதிப்போம்!!
கவிஞர் இரா.கலைச்செல்வி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!