பள்ளி செல்லும் வயதில்
சுள்ளி பொறுக்க
வைத்து விட்டீர்கள்!
பால் மணம்
மாறா வயதில்
பால்ய விவாகம்
செய்து வைத்தீர்கள்!
கனவை சுமக்கும்
வயதில்
கருவை சுமக்க
வைத்து விட்டீர்கள்!
அஞ்ஞானத்தினால்
விஞ்ஞானத்தை மறந்து
மெஞ்ஞானத்தை ஆம்
பெண்ணின்
மெய்ஞானத்தை
ஒழித்துவிட
பார்க்கிறீர்கள்!
கவிக்கு வரி சேர்க்கும்
காரியமல்ல இது!
மனதின் காயங்களுக்கு
சுகம் சேர்க்கும்
ஸ்வரம்!
பெண்ணே!
சாத்திரத்தை
சாக்கு சொல்வோரை
மறந்து
உலகை வெல்லும்
சூத்திரம் நினைந்து
தரித்திரம் தொலைந்து
சரித்திரம் படைக்க
ரௌத்திரம் பழகி
வீறு கொண்டு எழு
மகளே! பெண்
மகளே!
– ஆர்.இந்துஜா
இந்துஜா அவர்களின் பிற கவிதைகள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!