பெண்

பெண்ணே!

விளக்கில் விழுந்ததும் உயிர்விடும்

விட்டில் பூச்சி அல்ல நீ!

அந்த விளக்கிற்கே உயிர் தரும்

மின்சாரம்…

காற்றில் உதிர்ந்து விழும்

பழுத்த இலையல்ல நீ!

அந்த மரத்திற்கே உயிர் தரும்

வேர்…

சேயாக இருந்தாலும், நீ

தாயாக இருந்தாலும்

உன்னை வாழ்த்துகிறேன், மகிழ்கிறேன்

நானும் பெண் என்பதில்!

– த.ஜான்சிராணி