அருவி போல் இருடா
என்றேன்! நீயோ
அவள் பின்னே
பாய்ந்தது சென்றாய்!
சுருதி போல் இருடா
என்றேன்! நீயோ
அவள் பாட்டுக்குள்
சுருங்கி போனாய்!
கரும்பு போல் இனித்திடு
என்றேன்! நீயோ
அவள் உருக்கிட
பாகாய் போனாய்!
அரும்பு போல்
இருந்திடு என்றேன்! நீயோ
அவள் மடியினில்
மலராய் போனாய்!
எறும்பு போல் உழைத்திடு
என்றேன்! நீயோ
என்னையே கடித்திட
துடித்தாய்!
வரும் காலம் உன் மகளாய்
வந்து நானேதான் பிறந்திருப்பேன்!
அப்போது உன் கண்ணீரை
நானேதான் துடைத்திடுவேன்!
பெரியோரை போற்றுங்கள்!
யாருக்கு தெரியும்?
அவர்கள் தான்
நம் சந்ததியாய் பிறப்பர் என்று!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!