ஒருவரை ஒருவர் காணாமலே கடித தொடர்பு வாயிலாக காதலித்தவர்கள் பற்றிய கதைகளைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன.
வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் கோப்பெருஞ்சோழனும் புலவர் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் காணாமலே நட்புடனும் அன்புடனும் இருந்தவர்கள் என்பது தமிழ் இலக்கியம் சொல்லும் செய்தி.
இருபதாம் நூற்றாண்டின் அரசியல் ஆளுமைகளும் இலக்கிய ஆளுமைகளும் எழுதிய கடிதங்கள் நூல்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.
ஒருவரை ஒருவர் காணாமலே கடித தொடர்பு மூலமாக நட்பு கொள்பவர்கள் ‘பேனா நண்பர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள்.
பேனா நண்பர்கள் குறித்த புனைகதைகளும் திரைப்படங்களும் வந்துள்ளன.
இன்றும் பேனா நட்பு உயிர்ப்புடன் இருப்பதாகவே நம்முடைய தேடலில் தெரிய வருகிறது.
Snail Mail எனப்படும் கையால் எழுதப்பட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் கடிதங்களில் எழுதி அனுப்பியவரின் முகத்தையே பெறுநர்கள் காண்பார்கள்.
இத்தகைய மரபு வழியான கையெழுத்துக் கடிதங்களும் குறிப்புகளும் இன்றும் அனுப்பி வைக்கப்படுகின்றன; பகிரப்படுகின்றன.
சமூக வலைதளங்களில் மனமொத்த நண்பர்களைப் பெற முடிவது போல், இன்றைய காலக்கட்டத்தில் பேனா நண்பர்களைக் கண்டறிவது எப்படி என்ற கேள்விக்குப் பின்வரும் களங்கள் உறுதுணை புரிகின்றன :
1.International Pen Friends ( IPF )
2.Pen Pal World
3.The Pen Pal Project
4.Slowly ( app )
5.Letter writing Alliance
6.Swap-bot
7.Postcrossing
8.Pen Pals Now
சமூக வலைதளக் குழுக்கள் :
1.Pen Pals Unite போன்ற பேஸ்புக் குழு
2.Reddit (r/penpals)
3.Instagram (hashtags# penpals #snailmail)
இன்றும் அதிக அளவில் பேனா நட்பு முறை பின்பற்றப்படும் நாடுகளாவன அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்த்ரேலியா, கனடா, ஜெரமனி, பிரான்ஸ், சீனா, தென் கொரியா, பிரேசில்
பேனா நண்பர்களின் வயதுக் குழுக்கள்
8 முதல் 12 வரையிலான சிறுவர் சிறுமியர், பதின் பருவத்தினர், இளைஞர்கள் (19 – 30 வயதினர்),
மூத்தவர்கள் (60 + வயதினர்)
தகவல் தொழில்நுட்பத்தால், தகவல் பரிமாறுவதற்கான மெசேஜிங் செயலிகள் இருந்த போதிலும் பேனா நண்பர்கள் என்கிற கருத்தாக்கம் உலகெங்கலும் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.
எஸ். மதுரகவி
கைபேசி: 9841376382
மின் அஞ்சல்: mkavi62@gmail.com