பேபிகார்ன் பிரைடு ரைஸ் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசு: 1 கப்

பேபி கார்ன் :6

குடை மிளகாய்: 1(சிறியது)

வெங்காயம்: 1

காரட்:1(சிறியது)

பூண்டு: 5 பல்

பச்சை மிளகாய்:1

மிளகு தூள்: ¼ ஸ்பூன்

சர்க்கரை: ¼ ஸ்பூன்

மிளகாய் தூள்: ¼ ஸ்பூன்

மைதா மாவு: 2 டேபிள் ஸ்பூன்

கார்ன்ப்ளேர் மாவு: 2 டேபிள் ஸ்பூன்

உப்பு: தேவையான அளவு

எண்ணெய்: தேவையான அளவு

 

செய்முறை:

பேபிகார்ன் பிரைடு ரைஸ் செய்வதற்கு, முதலில் குடை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் ஆகியவற்றை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.பேபிகார்னை பக்கவாட்டில் நீளத் துண்டுகளாக நறுக்கி 3 நிமிடம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் வடிகட்டி நன்கு துடைத்து வைத்துக் கொள்ளவும்.

கார்ன்ப்ளேர் மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், உப்பு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதில் பேபிகார்னை புரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்துக் கொள்ள வேண்டும். பாசுமதி அரிசியை 1 ¼ கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் நெய் விட்டு உப்பு சேர்த்து பாசுமதி அரிசியை போட்டு வேக வைக்க வேண்டும். பின் இதை அகலமான தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். சாதம் உதிர் உதிராக இருக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய குடை மிளகாய், கேரட், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

ஓரளவு வதங்கியபின் ¼ ஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு, பொன்னிறமாக பொறித்த பேபி கார்ன் சேர்த்து வதக்கவும்.

கலவையுடன் மிளகு தூள், ஆறவைத்த சாதம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறவும். சுவையான பேபிகார்ன் பிரைடு ரைஸ் தயார்.

– பிரபாவதி