தொடங்கும் இடமா
முடிவுறும் இடமா
தெரியவில்லை
நின்று கொண்டே இருக்கின்றேன்
கைவிடப்பட்டவனாக
கடற்கரையில்
சிலர் காலவிரயம் என்றும்
இன்னும் சிலர் பைத்தியத்தின் உச்சம் என்றும்
எவரோ ஒருவருக்கான அலையில் கால் நனைத்தும்
எங்கோ மோதி சிதறும் அலையில் சிறிது நனைந்தும்
நகர்ந்து செல்ல,
நான் மட்டும் காத்து கிடக்கின்றேன்
எனை வாரியணைத்து
ஆழங்களை காண்பிக்கபோகும்
அலைகளுக்காக
அந்த கரையினிலே…
ராஜன் பாபு
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!