கறையணி கண்டதத் தம்மான் கருத்தினிலே தோணினானை
மறையணி பூணுவானை மழுவொரு சூலத் தானை
குறையணி அகந்தையாளர் குணத்தினை அடக்குவானை
சிறையறுவடுகன் தாளைச் சிந்தையில் வாழ்த்துவோமே!
திருவுறைச் சொல்லு மாகித் தெறிமனம் பொருளு மாகி
வருபொருட் செல்வம் ஞானம் வளர்புகழ் தானேயாகிப்
பெருவினை அகல நாளும் பிதற்றுவார் உள்ளே தோன்றும்
திருவினை வயிரவ தேவை திருந்தடி வாழ்த்துவோமே!
புலரிதன் கதிர்களாகிப் புவிக்கெலாம் ஒளியானானை
மலரினை மலர்த்துவானை உலகெலாம் ஆகி வேறாய்
உயிருடன் ஒன்றுவானை நிலமதில் வயிரவன் தாள்
நினைந்து நாம் வாழ்த்துவோமே!
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!