பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
பொங்கணும் பொங்கணும் இன்பமும் பொங்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
தங்கணும் தங்கணும் இன்பமும் தங்கணும்
தங்கணும் தங்கணும் ஒற்றுமை தங்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
நீங்கணும் நீங்கணும் துன்பமும் நீங்கணும்
நீங்கணும் நீங்கணும் வறுமையும் நீங்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
கழியணும் கழியணும் பழைமையும் கழியணும்
கழியணும் கழியணும் கயமையும் கழியணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
கிட்டணும் கிட்டணும் நன்மையே கிட்டணும்
கிட்டணும் கிட்டணும் வெற்றியே கிட்டணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
வகுக்கணும் வகுக்கணும் திட்டம்தான் வகுக்கணும்
வகுக்கணும் வகுக்கணும் நல்வழியுமே வகுக்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
எட்டணும் எட்டணும் [திட்ட] இலக்கையும் எட்டணும்
எட்டணும் எட்டணும் சிகரம்தான் எட்டணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
கூட்டணும் கூட்டணும் நன்மையைக் கூட்டணும்
கூட்டணும் கூட்டணும் நல்லறிவை நாம் கூட்டணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
பெருக்கணும் பெருக்கணும் உழைப்பையே பெருக்கணும்
பெருக்கணும் பெருக்கணும் நற்செல்வத்தைப் பெருக்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
கழிக்கணும் கழிக்கணும் பழைமையைக் கழிக்கணும்
கழிக்கணும் கழிக்கணும் பகைமையைக் கழிக்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
வகுக்கணும் வகுக்கணும் நல்வழியுமே வகுக்கணும்
வகுக்கணும் வகுக்கணும் வாழ்க்கையை வகுக்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
வளர்க்கணும் வளர்க்கணும் நற்றமிழையே வளர்க்கணும்
வளர்க்கணும் வளர்க்கணும் தமிழர் ஒற்றுமை வளர்க்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
காக்கணும் காக்கணும் பெற்றோரைக் காக்கணும்
காக்கணும் காக்கணும் மானுடம் காக்கணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
போற்றணும் போற்றணும் பெண்மையைப் போற்றணும்
போற்றணும் போற்றணும் நற்பண்பையே போற்றணும்
பொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்
பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்!
சிராங்குடி த. மாரிமுத்து
மன்னார்குடி
94436 73155