வெட்டாத செங்கரும்பு
வேக வைத்த பனங்கிழங்கு
கெட்டியான நெய் சேர்த்து
செஞ்சு வச்ச பொங்கலுன்னு
பொங்கல் நாளும் நம்மைப்
பார்த்து தேடி வருது!
போனதெல்லாம் மறந்து
வாழச் சொல்லுது!
கொட்டும் பனி மார்கழியில்
கோலம் போட்ட வாசலில
நட்டநடு வீதியில
நல்லதொரு பொங்கல் வச்சு
பொங்கல்நாளும் நம்மைப்
பார்த்து தேடி வருது!
பொங்கும் இன்பம் தன்னையே
கொண்டு வருது!
கட்டிவச்ச மஞ்சளோட
காளையது மாலையோட
சுட்டெரிக்கும் சூரியனை
சேர்ந்து நாம வாழ்த்திப் பாட
பொங்கல்நாளும் நம்மைப்
பார்த்து தேடி வருது!
பெய்த மழைவானுக்கு
நன்றி சொல்லி வருது!
பட்ட துயர் மறந்திடவே
பாயும் ஒளி பெற்றிடவே
விட்டசெல்வம் மீட்டிடவே
வீடு வந்து வாழ்த்திடவே
பொங்கல் நாளும் நம்மைப்
பார்த்து தேடி வருது!
பெருஞ்செல்வம் சேர்ந்திடத்தான்
செய்தி சொல்லி வருது!
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!