பொங்குக பொங்குக தமிழ்ப் பொங்கல்!
மங்கலம் பெருக்கிடும் தைப் பொங்கல்!!
உலகைக் காக்கும் பரிதியைப் போற்றிடவே
உணவைக் கொடுக்கும் உழவரைப் போற்றிடவே
பொங்குக பொங்குக தமிழ்ப் பொங்கல்!
மங்கலம் பெருக்கிடும் தைப் பொங்கல்!!
உழவுக்கு உதவும் மாட்டைப் போற்றிடவே
உயர்வீரம் தரும் சல்லிக்கட்டைப் போற்றிடவே
பொங்குக பொங்குக தமிழ்ப் பொங்கல்!
மங்கலம் பெருக்கிடும் தைப் பொங்கல்!!
உறவுகள் கூடிப்பேசி மகிழ்ந்திடவே
உயர்தனிச் செம்மொழி தமிழைப் போற்றிடவே
பொங்குக பொங்குக தமிழ்ப் பொங்கல்!
மங்கலம் பெருக்கிடும் தைப் பொங்கல்!!
வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!