நம் கருத்தைப் பிறர் மீது திணிக்கக்கூடாது
வீட்டில் குப்பையை கூட்டும் போது உடனே வெளியில் அள்ளிப் போட வேண்டும்
பழங்கள், நிலக்கடலை, கரும்பு சாப்பிட்டு விட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது
மாலை 6 மணி அளவில் நம் வீட்டின் பின் கதவை மூட வேண்டும்
தூங்கும் குழந்தையைத் தூளியோடு சேர்த்து அடுத்த அறைக்குக் கொண்டு செல்லக் கூடாது
இரவில் துணி துவைக்கக் கூடாது
குழந்தை பிறந்த வீட்டில் புதுமணத் தம்பதிகள் இருந்தால் அவர்கள் குளித்து விட்டு தான் குழந்தையைத் தொட வேண்டும்
கர்ப்பிணி பெண்கள் வாயிற்படியில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. அப்படி படுத்தால் பிரசவம் சிக்கலாக இருக்கும்
திருமணமான பெண்கள் கையில் வளையல் இல்லாமல், நெற்றியில் பொட்டு இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது
கைகுழந்தையுடன் திருமணத்திற்கு சென்றால் குழந்தையை புதுமணத் தம்பதிகளிடம் கொடுத்து வாங்க வேண்டும்
பாலை அடுப்பில் பொங்க விடக்கூடாது
இவை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.