தேவையான பொருட்கள்
அரிசிப்பொரி – 1 லிட்டர்
சீனி – 100 கிராம்
நெய் – 4 டீஸ்பூன்
செய்முறை:-
அடிகனமான வாணலியை அடுப்பில் சிறுதீயில் வைத்து நான்கு டீஸ்பூன் நெய்யை விடவும். பின் 100 கிராம் சீனியைச் சேர்க்கவும்.
சீனி நெய்யுடன் சேர்ந்து இளகிய பின் பொறு பொறுப்பான 1 லிட்டர் அரிசிப்பொரியை அதனுடன் சேர்க்கவும். நன்கு கிளறிவிடவும்.
பொரி, சீனி, நெய் சேர்ந்து பெரிய பந்து போல் உருண்டு வரும் வேளையில் கீழே இறக்கி சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம்.
அல்லது நெய் தடவிய தட்டில் பெரிய பந்து பொரி உருண்டையைக் கொட்டி பூரி கட்டையால் விரித்து விட்டு கத்தியைக் கொண்டு சிறுசிறு வில்லைகளாகப் போட்டு ஆறிய பின் எடுக்கவும். சுவையான பொரி உருண்டை தயார்.
Comments are closed.