பொறந்திருச்சு புது வருசம் மறைஞ்சிருச்சு நம் துயரம்

பொறந்திருச்சு புது வருசம்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

நடந்ததையெல்லாம் மாற்றிடவும்

நன்மைகள்மிகவும் பெருகிடவும்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

பறவைகள் போல் நாம் பறந்திடலாம்

பாடியும் ஆடியும் திரிந்திடலாம்

மறைந்தே தாக்கும் நோயகற்றி

மண்ணை மீண்டும் காத்திடவும்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

உறவுகளாகவே உலகினைக்கூட்டி

உணர்வுகளாலே ஒன்றென மாற்றி

மறந்து போன மானுடநேயம்

மறுபடி இங்கே நிலைத்திட வேண்டி

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

இரவும் பகலும் அடைந்து கிடந்த

இன்னலும் துயரும் கடந்து மீண்டும்

திறனுடன் மனித அறிவே வென்றிட

திறந்திடும் புதிய பாதையில் நாம் செல்ல

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

கவிதையைக் கேட்டு ரசிக்க கீழே உள்ள காணொலியைக் காணவும்.