பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2020

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், முதல்  200 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 34 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு , 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-ஆம் வெளியிடப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 89.93 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் மற்றும் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 64.10 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் மற்றும் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 59.89 மதிப்பெண்கள் பெற்று, தமிழக அளவில் மூன்றாவது இடத்தில் மற்றும் இந்திய அளவில் பதினான்காவது இடத்தில் உள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2020

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 89.93 1
2 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 64.10 9
3 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 59.89 14
4 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 59.32 15
5 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் 51.79 37
6 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 50.95 41
7 ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 49.26 44
8 பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 47.21 49
9 சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 46.77 51
10 கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி அகாடமி, ஸ்ரீவில்லிபுத்தூர் 43.71 60
11 தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை 43.11 64
12 இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் (IIFPT), தஞ்சாவூர் 40.24 74
13 காருண்யா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் 39.40 80
14 குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 39.24 82
15 ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் 38.83 83
16 கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் 38.24 90
17 வேல்டெக் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா அறிவியல் & தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 37.86 95
18 மெப்கோ ஸ்லங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி 37.52  101
19 அரசினர் தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 37.10 104
20 இராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை 37.01 106
21 இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், சென்னை 36.98 107
22 ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 36.91 108
23 பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 35.41 123
24 கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை 34.45 135
25 ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் 33.79 142
26 சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை 33.55 149
27 சோனா தொழில்நுட்ப நிறுவனம், சேலம் 33.53 150
28 ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் 33.43 152
29 ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி, திருவள்ளூர் 33.24 155
30 செயின்ட் ஜோசப்ஸ் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 32.95 160
31 ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 32.12 176
32 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், சென்னை 31.63 182
33 நேசனல் பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி 31.36 189
34 ஸ்ரீ சாய் ராம் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 31.32 192

 

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019  பட்டியலில், முதல் 200 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இடம் பெற்றன.

ஆனால் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், முதல் 200 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 34 பொறியியல் கல்லூரிகள் தான் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும்  முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.