மனவழுக்கைப் போக்கி
குணவழகைக் கூட்டி
சினமதனைப் போக்கி
சிரிப்பதனை ஏற்றி
வன்மத்தினைப் போக்கி
வாஞ்சையினை நீட்டி
அறியாமையினைப் போக்கி
அறிவதனைப் பெருக்கி
வறுமையினைப் போக்கி
வளமதனை நாட்டி
சிறுமையினைப் போக்கி
பெருமையினைத் தூக்கி
கொலைகுணத்தைப் போக்கி
கொடைகுணத்தை உயர்த்தி
போக்கினில் இருப்பதை தீக்கிரையாக்கி
புதிதாய் மலர்ந்த மானிடர் போல
போகனாய் வாழ்ந்திட..
அனைவருக்கும் போக்கித் திருநாள் வாழ்த்துகள்!
க.வடிவேலு
தகடூர்
மறுமொழி இடவும்