சீரழிக்கும் பழக்கங்கள்
தலைவிதியை மாற்றும்!
சேராத இடம் சேர்ந்தால்
தீயவனாய் ஆக்கும்!
இரக்கமற்ற குணம் யாவும்
இனியுடனேத் தோன்றும்!
அரக்கனாகத் தகாதவற்றை
அத்துமீறச் செய்யும்!
தரமில்லா செய்கையினால்
சந்ததிகள் சோகம்!
கரம்கூப்பி அழைத்திடுவாள்
குலமகளும் நாளும்…
பேரழிவை உண்டாக்கும்
போதைகளை விட்டு
பேர்புகழை அடைந்திடுவாய்
பேருலகில் இன்றே!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com