மின்சார வசதியற்ற நாட்களில்
அப்பாவின் ஓல்டு மங்
பாட்டில்தான்
எங்கள் வீட்டின் திரிவிளக்கு.
அதன் ஒளியில் நான்
படித்துக் கொண்டிருந்தேன்.
மங்கல்தன்மையை அது
என்னிடம் காட்டவில்லை.
எதிர்கால பாதையின் மேல்
ஏனோ அதற்கு
பரிவு இருந்தது.
போதையேறிய
அப்பாவின் கால்களிலிருந்த
தள்ளாட்டம்,
அதே பாட்டிலின்
துளியைக் குடித்ததால்
ஒளிக்கும் இருந்தது.
காற்றின் தொடுதலில்
அதன் போதை
காட்டிக் கொடுக்கப்பட்டது!
சிதவி.பாலசுப்ரமணி
கைபேசி: 7448705850
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!