போருக்கு ஆயத்தம் ஆகாமல்…

போருக்கு ஆயத்தம் ஆகாமல்
கூர் தீட்டப்படுகிற உடைவாள்கள்!

பசியையும் மறக்கடிக்குமளவு
உபதேசிக்கப்படுகிற சித்தாந்தங்கள்!

இன்னமும் ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள்
கேட்டுச் சலிக்கிற சோழர் காலத்து விக்ரகத்தின் செவிகள்!

டைரியின் உள்ளே எழுதி மட்டும் வைக்கிற
ஆசைகளைப் புதுப்பித்துக் கொள்கிற வருடங்கள்!

ச.குரு பிரசாந்

Visited 1 times, 1 visit(s) today