மகனுக்கு ஓர் அறிவுரை

அன்பு மகனுக்கு அன்னையின்
அன்பான அறிவுரை!

என்னின் பெருமை உன்னையன்றி
இவ்வுலகில் யார் அறிவார் மகனே?

பெண்ணின் பெருமை பெண்ணால் மட்டுமின்றி
உன்னாலும் ஓங்கிடுமே என் கண்ணே!

பெண்ணைப் பார்ப்பது தவறல்ல கண்ணே!
உன் பார்வை அவளை
நிலைகுலையச் செய்தால் அது தவறு!

பேசுவது தவறில்லை கண்ணே!
உன் பேச்சு அவளை
நாணிடச் செய்தால் அது தவறு!

கைதொட்டுப் பேசுவதில் தவறில்லை கண்ணே!
உன் உள்ளங்கை வெப்பம் அவள்
உணர்வை தூண்டும் என்றால் அது தவறு!

அருகமர்வது தவறில்லை கண்ணே!
ஆனால் மெய்சிலிர்க்க உரசுவது தவறு!

ஊர் சுற்றித் திரிவது தவறில்லை கண்ணே!
ஊரார் கண் உறுத்தும்படி சுற்றுவது தவறு!

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி