என் உயிர் தந்த என் உயிருக்கு
உயிர் வந்த நாள் இன்று!
கண்ணுக்குள் வைத்தென்னைக் காப்பாற்றும்
கண்மணி அவள் கண்விழித்த நாள் இன்று!
அழாது எனை வளர்க்க அவள்
அழத் தொடங்கிய நாள் இன்று!
புன்னகை பூ அதனை
என் வாழ்வில் புகுத்த வந்த
பூங்கொடி இப்புவிக்கு வந்த நாள் இன்று!
என் கைப்பிடித்து வழிநடத்த அன்று
அவள் கால் பதித்த நாள் இன்று!
எனக்கு உணவளித்து உயிர் கொடுத்த அவள்
உருவெடுத்த நாள் இன்று!
எங்கள் தொப்புள் கொடி உறவு அது
தொடங்கிவிட்ட நாள் இன்று!
எனக்கு அகிலத்தை காட்டி விட
என் அன்பானவள் அவதரித்த நாள் இன்று!
நான் என்றென்றும் வணங்கும்
என் பிரியமானவளுக்கு
பிறந்த நாள் இன்று!
-உன் மகள் சி.பபினா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!