மகளே – கவிதை

கால்கடுக்க நெடுந்தூரம் தொடர்ந்த இருளாம் அப்பயணம்

காளிகளும் முனிகளும் துணையாம் பாதை

இருபுறத்தில் பனைகளின் அச்சம்

ஓலைகளின் ஓசை ஓலம் போன்ற ஓசை

மதியின் ஒளியில் வாடும் தென்றலொருபுறம் அச்சம்

அவன் ஐயத்திற்கு விடையாய் விளைவாய்

வந்து சேர்ந்தான் சாத்தான்.

சாத்தானின் கண்களில் ஆயிரம் பசி.

உயிர் பிரிவதை உணர்ந்தவனுக்குத்

துளி ஐயம் இல்லையாம்;

நீ ஐயப்படாமைக்கு காரணம் யாதோ?

சாத்தான் கேட்டான்.

புன்னகையுடன் கண் மூடினான்

பதில் கொடுத்தான்

இரு வழிகளில் உனக்கு எதிரி தேவதைகளின் தரிசனம்.

யாவர்?

எம் பெண்மணிகள்; தேவதைகள்.

சாத்தான் சென்றான் வந்த வழியே!

க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.