பாரதத்தின் நாயகனாம் எங்கள் அய்யன்
பார்வையாலே சுட்டெரிக்கும் வீரன் மெய்யன்
பாட்டினாலே பாமரரை தன்பால் கொண்டவன் போல்
பாரினிலே யாருமுண்டோ சொல்லீர் அந்தோ!!
மாக்களைப் போல் தூங்கிநின்ற மாந்தர் தாங்கள்
மாகவிஞன் பாக்களாலே வீரம் கொள்ள
போர்த்தொடுத்த அந்நியனை மாளச் செய்த
பார்மகனாம் பாரதியைப் போற்று வேனே!!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com