தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 800 கிராம்
பொரிகடலை 200 கிராம்
வெண்ணெய் 50 கிராம்
உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணெய் பொரித்து எடுக்க தேவையான அளவு
செய்முறை
அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். பொரிகடலையை மிக்ஸியில் அடித்து, சலித்து கொள்ளவும். அரிசிமாவுடன் சலித்த பொரிகடலை மாவு, வெண்ணெய், உப்பு கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து, முறுக்கு அச்சில் ஊற்றி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மகிழம்பூ முறுக்கு தயார்.