மகிழவா

என்ன செய்யலாம் தோழனே – இது

தேர்வு முடிந்த காலமே!

புன்னகை தன்னை முகத்தில் தேக்கியே

புவியினில் வலம் வரத்தோணுதே!

 

தண்ணீர் நிறைந்த கேணிகள் – தேடி

தாவிக் குதித்து நீந்தவா?

உண்ணும் உணவினை உலக்கு அளிக்கும்

உழவுத் தொழிலை அறியவா?

 

மண்ணு உலகுதனில் மக்களின் – மானம்

காத்திடும் நெசவினைக் கற்கவா!

திண்ணையில் தூங்கிக் கிடக்கும் சிலரை

திருந்திடச் செய்து காட்டவா!

 

கன்னித் தமிழில் கவிதைகள் – சில

காவியம் படித்து மகிழவா!

பண்ணோடு இசையினைப் பாடி மகிழ

பல்லவி தன்னைத் தேடவா!

 

என்னநாம் செய்த போதிலும் – அதில்

ஏற்ற நன்மையைத் தேடணும்!

விண்குடை கீழே வாழ்ந்திடும்

விரிகடல் நலம் பெற வேணுமே!

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.