மகனோ மகளோ எதுவாயிருப்பினும்
நமக்கெனெ இயற்கை தந்த
வரம்தான்… வளம்தான்!
பகலோ இரவோ நம் பயணம் தொடர்ந்திட
பாதை காட்டிடும் கலங்கரை விளக்கு…
வாழ்வின் சிறப்பு!
புயலோ மழையோ எளிதாய் தாங்கிடச்
செய்யும் உரம்தான் நமக்கு…
நமக்குள் உயிராய் இருக்கு!
அயர்வுடன் சோர்வு சூழும் பொழுதெல்லாம்
அதை விரட்டிடும் மருந்து…
அன்பெனும் விருந்து!
மகள்(ன்) வரம் எனில்
அதனை (மக்களைப்) பெற்ற
மகராசி (ராசன்) நாமோ மனதால் உயர்வோம்!
அவர்கள் வளர்ச்சியைக் கண்டு
மகிழ்ச்சியில் திளைப்போம்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!