தேவையான பொருட்கள்
தோசை மாவு தயார் செய்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் : 4 நறுக்கியது
வெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு
இஞ்சி : ஒரு சிறு துண்டு
(மிகவும் மெல்லியதாக வெட்டவும்)
பொரிகடலை : 2 மேஜைக் கரண்டி
(நைசாக பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து அரை குறையாக உதிர்த்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு இலேசாக வெங்காயத்தை வேக விடவும். மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.
தண்ணீர் சற்று வற்றியதும் உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்துக் கிளறி சற்று புரட்டினாற் போல் இறக்கி, பொரிகடலை மாவைத் தூவி கிளறி வைக்கவும்.
இட்லி தோசைக்குத் தயார் செய்த சட்னியைச் சற்று கெட்டியாக வைக்கவும்.
தோசைக் கல்லில் தோசை மாவை ஊற்றி நைஸாக விரித்து திருப்பிப்போட்டு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்னியையும் விரித்து வைத்து மறுபாதி தோசையினால் மூடவும். சுவையான மசாலா தோசை ரெடி!