அரசுப்பள்ளி

மதிப்பெண் சதம்தான்!

நன்றாக படிக்கணும் அன்றே
முடிக்க வேணும் – கண்ணே
பின்னாலே படிக்கலான்னு அண்ணாந்து
விட்டுடாதே துன்பத்தில் வீழ்ந்திடாதே – கண்ணே

முன்னாலே முடித்திடு
மனத்திலே நிறுத்திடு
தன்னாலே வந்துவிடும் விடைதான்
பின்னாலே மதிப்பெண் சதம்தான்
!

இந்த அண்ணாத்த சொல்லுறான்னு
பந்தாவைக் காட்டிடாதே
சொந்தம் என்று சொல்லிவிட்டேன் – கண்ணே
உந்தன் நல்லதுக்கு என்று எண்ணி கொள்ளேன்!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்