மது சிறு குறும்புக்காரன்
சிறையில் வைக்க முடியாத
சில்மிஷக்காரன்!
காதல் தோல்விக்கு
காவல்காரன்!
அண்டத்தை கூட அளவுகோல் இல்லாமல்
அரை மணி நேரத்தில் அளந்து விடுவான்!
போர்களை துவக்குபவனும் அவனே
போர்களை முடிப்பவனும் அவனே!
சென்ற இடம்மெல்லாம் சிறப்படைபவர்களும் உண்டு
இறுதியில் செருப்படி வாங்கியவர்களும் உண்டு!
பழகியவர்க்கு பலன் இல்லாத
கவி சொல்லும் அதிமதுரமே!
மூணு முடிச்சு போட்டவ
மூன்று வேளை சோறு வச்சு காத்திருக்க
மூச்சு முட்ட குடிச்சு முச்சந்தியில் கிடக்கிறான்!
மதுவை ஒழித்து விடு மாற்றத்தை கொண்டு வா!
ஆனந்தன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!