தோட்டத்துல காய்பறிக்க
துணையில்லாம போகையில
தொடர்ந்து பின்னால் வருதம்மா
தொல்லை மிகத் தருகுதம்மா
வீட்டைவிட்டு வெளியிலதான்
வேலைக்கு நான் போகையில
வேகமாக வருகுதம்மா
வேதனையை தருகுதம்மா
பாட்டெடுத்து பாடிகிட்டு
பாதையோரம் போகையில
பக்கம் வந்து என்னோட
பாட்டோட சேருதம்மா
வாட்டுமதை விரட்டிடத்தான்
வழியை நானும் தேடையில
வந்து முன்னே நிக்குதம்மா
விழுந்து விழுந்து சிரிக்குதம்மா
வஞ்சிஉன் நெனப்புதான் வாட்டுது – அது
வந்துபோயி தொல்லையத்தான் கொடுக்குது
பஞ்சுபோல பறந்திடத்தான் வைக்குது – அது
பகலும் இரவும் ஒன்றாகத்தான் காட்டுது
காட்டுவழி காவலுக்கு
கம்பெடுத்து போகையில
காட்டுமல்லி வாசத்தோடு வருகுது
கைவிலங்கா என்னைக் கட்டிப்போடுது
மாட்டிக்கிட்டு நான் விழிக்க
மனசிலதான் நீ நிறைய
பூட்டி வச்ச உன்மனசு திறக்குமா?
பூவாக என்னைச்சூட நினைக்குமா?
வஞ்சிஉன் நெனப்புதான் வாட்டுது –அது
வந்துபோயி தொல்லையத்தான் கொடுக்குது
பஞ்சு போல பறந்திடத்தான் வைக்குது – அது
பகலும் இரவும் தூக்கத்தைதான் கெடுக்குது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!