எல்லா மனிதர்களும் எந்த நேரத்திலும்
உண்மையை வெளிப்படுத்தவும் பேசவும் மாட்டார்கள்
அப்படிப் பேச எப்போதும் தயங்குவார்கள்
அப்படி ஒருபோதும் பேச மாட்டார்கள்
ஏனோ தெரியவில்லை
அவர்களுக்கு அப்படி என்ன
கஷ்டமோ நஷ்டமோ தெரியவில்லை
எப்போதும் இந்த வலி உணர மட்டும் செய்வார்கள்
ஒருபோதும் வெளிகாட்டிக் கொள்ள மாட்டார்கள்
தன்னுள்ளே வைத்துக் கொள்வார்கள்
அந்த வலியை ஏற்றுக் கொள்வார்கள்
ஒரு வகையில் சொல்லப் போனால்
நானும் அவர்களைப் போல ஒரு மனிதன் தான்
என்ன செய்வது நானும் அப்படியே தான் இருக்கிறேன்
ஏதோ ஒன்றைத் தொலைத்து விட்டு தேடுகிறேன்
பிறகு தான் தெரிந்தது உன்னைத் தொலைத்து விட்டேன் என்று
உண்மையாக சொல்லப் போனால்
என்னைத் தான் தொலைத்து விட்டேன்
உன்னைத் தொலைத்து விட்டேன் என்று
என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று
உண்மைக்கு மாறாக நின்று கொண்டிருக்கிறேன்
என்ன செய்வது நானும் ஒரு மனிதன் தானே!
சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188