மனநல வல்லுனர்களும் மனிதர்களே
மனநல மருத்துவர்களும் மனிதர்களே
மனநலம் பாதிக்கப்பட்டவனும் மனிதனே
மற்றவரின் மனநலம் கலங்கடிப்பவனும் மனிதனே
குழந்தையாக பிறந்து
இளைஞர்களாக வளர்ந்து
கிழவர்களாக தளர்ந்து
மனங்கள் மட்டும் மலர்களாக மலர்ந்து
“பருவகாலங்களாக சுழன்று செயல்படும் மனம்
சில நேரங்களில்…’’
குளிரில் அனலாய் கொதித்தும்
வெயிலில் குளிராய் உறையவைத்தும்
காற்றில் அலையாய் அடித்தும்
மலைசாரல்களில் வியர்வையாய் வேர்த்தும்
இயற்கையோடு எதிர்வினை ஆற்றும்
வாழும் குடும்பசூழலும்
பழகும் உறவும் நண்பர்கள் வட்டமும்
செய்யும் தொழிலின் தன்மையும் மட்டுமே
ஒருவனின் மனநிலையை உருவாக்கும்
தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும்
புண்படுத்தாமல் புதுப்பித்துக் கொள்வதே
மனநலம்
ப. கலைச்செல்வன்
9385517371
Very nice