காந்தி

மனிதனாக்கும் மரம் – கவிதை

சித்தார்த்தனைப்
புத்தனாக்கியது
போதி மரம்

அசோகசக்ரவர்த்தியை
ஆண்டவனாக்கியது
போர் மரம்

காந்திஜியை
மகாத்மாவாக்கியது
சுதந்திர மரம்

கண்ணதாசனை
கவியரசனாக்கியது
ஞான மரம்

எனக்கோர் மரத்தைத்
தேடுகிறேன் என்னை
மனிதனாக்கவும்
புனிதனாக்கவும்….

ரோகிணி கனகராஜ்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.