இயற்கையின் இன்ப சரித்திரத்தில்
பூமியும் ஒன்று
அது அண்டத்தின் அழகான திருவுருவம்
ஆற்றல் நிரம்பிய பேருருவம்
அங்கு உயிர்க்கூட்டத்தின் மத்தியில்
மனிதன் என்னும் பேய்கூட்டமும் உண்டு
அந்த பேய்க்கூட்டம்
மண்ணை மலடாக்குகிறது
காற்றை மாசாக்குகிறது
உயிர்களை துன்புறுத்துகிறது
கூட்டாக பூமியை சூரையாடுகிறது
ஒன்றை ஒன்று வஞ்சித்துக் கொல்கிறது
இயற்கையை இம்சைபடுத்துகிறது
போட்டி போட்டுக்கொண்டு
போர்களை துவங்குகிறது
உயிர்களைக் கொல்கிறது
இழிந்த பேய்க்கூட்டம் என்று திருந்தும்?
இப்படிக்கு
மனிதன் மத்தியில் சிக்கித் தவிக்கும் புவி
க.கருப்பணன்
மதுரை-625107
கைபேசி: 8838619670