கூட்டுப் புழுவாக அடைந்து கிடந்து
தன்னிலை உணர்ந்து கூட்டினை
உடைத்து வண்ணச் சிறகடித்து
வெளிவருகிறது வண்ணத்துப்பூச்சி …
ஒவ்வொன்றும் பிறக்கும் முறை ஒன்று
பிறந்த பின் மண்ணில் பறப்பவற்றை
நாம் காணப் பலப்பலவாய்
எண்ணற்ற வகைகளாய்
மனிதர்களும் அது போலே…
மனிதரில் இத்தனை நிறங்களா?
ஆம் ஒருவருடன் ஒருவரை ஒப்பிட
இயலா வகையில் எண்ணற்ற குண இயல்பில்…
ஆம் நாம் நம்மை நம்முடன் மட்டுமே
ஒப்புமை படுத்த இயலும்
நாம் பெற்ற நண்பர்களுக்கும்
நாம் பெற்ற செல்வங்களுக்கும்
இது பொருந்துமன்றோ…
ஒவ்வொன்றிலும் கண்டறிந்த
தனித்தன்மை அறிந்து அதனையே
பாராட்டி வளர்க்க
சிறந்தவற்றை வார்த்தெடுக்கலாம்…
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!