மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் எல்லாம் அதனதன் இயல்பிற்கேற்றவாறு செயல்படுகின்றன. அவை மனிதனைப் போல சிந்தித்து செயல்படுபவை அல்ல.
அவை தாம் உயிர் வாழ இரை தேடி இருப்பதே இயல்பு. அப்படியான விலங்கினங்களில் சிலவற்றை மனிதன் தன் வசப்படுத்தினான்.
விவசாயம், அதைச் சார்ந்த தொழில்கள், பால் கறவைத் தொழில் மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்கு அவற்றைப் பயன்படுத்தினான்.
நாய்களை தன்னுடன் காவலுக்கு இருக்கப் பயன்படுத்தினான். தன்னுடைய உணவிற்காகவும் சில விலங்குகளைப் பயன்படுத்திக் கொண்டான்.
அப்படிப் பயன்படுத்தும்போது விலங்கினங்களை மேய்ப்பது மற்றும் அவைகளுக்குத் தேவையான வைக்கோல் உள்ளிட்ட உணவுகளை சேமித்து, தேவைப்படும்போது வழங்குவது என்று தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
‘மாட்டிற்குத் தெரியாது தன் சேவை குறையும்போது தன்னை கசாப்புக் கடைக்காரனுக்கு விற்று விடுவர்’ என்று.
இருக்கும் வரை அவை கவலையின்றி இருக்கும்.
ஆடுகளுக்கும் தன்னை மேய்ப்பது, அறுப்பதற்கே என்று தெரியாது. மகிழ்ச்சியோடு மேய்ந்து வீட்டை சுற்றியே வந்து கொண்டிருக்கும்.
இவைகளுக்குத் தன் பின்னாள்; நிலை பற்றி சிந்திக்கத் தெரியாது. ஆகவே எப்போதும் கவலையில்லாமல் இருக்கின்றன.
மன அழுத்தம் என்ன என்பது அவற்றிற்குத் தெரியாது.
ஓடிக் கொண்டிருக்கும் மனித மனதில் உதித்திக் கொண்டிருக்கும் எண்ணங்கள் ஓராயிரங்கள். ஒரு நொடிக்கூட மனம் சும்மா இருப்பதில்லை.
மன அழுத்தம் ஒரு நோயாக இருப்பது என்பது மனிதனுக்கு மட்டுமே.
இவ்வழுத்தம் வரக் காரணம் மனிதனின் எண்ணங்களும் ஆசைகளுமே..
உழைப்பவனிடம் சுரண்டுவது, ஏமாற்றுவது, பொய்யுரைப்பது, திருடி சேர்த்து வைப்பது இவையனைத்தும் மனிதன் மட்டும் செய்யக் கூடியது. மற்ற எந்த உயினமும் செய்யாது.
சுய நலமின்றி இருப்பதே வேள்வி
பிரதிபலன் கருதாச் சிந்தனையே தவம்.
‘எல்லோரிடமும் இறைவன் இருக்கின்றார். அவர் இல்லா இடமே இல்லை என்று உணர்தலே சிறப்பு’ என்று சொல்லும்போது, இறைவனுக்காக உயிர் பலி என்பது ஏற்கக் கூடியதா?
சிந்தித்தல் அவசியம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450